Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள சில கிராமங்களில், சிறுவர்களுக்கு கொள்ளைடிக்க ரூ. 3 இலட்சம் கட்டணத்தில் பயிற்சி அளிப்பது அம்பலமாகியுள்ளது.
ராஜ்கர் மாவட்டத்தில் கடியா, குல்கேடி, ஹல்கேடி என்ற கிராமங்களில் இந்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தலைநகர் போபாலில் இருந்து 117 கி.மீ. தொலைவில் உள்ள இந்த கிராமங்களில் இந்த நிலை காணப்படுகிறது. 12 வயது சிறுவர்களுக்கு கொள்ளை, திருட்டு பயிற்சிகளை அவர்களது பெற்றோர்கள் அளிக்க ஏற்பாடு செய்கின்றனர்.
பயிற்சிக்காக கைதேர்ந்த திருடர்கள், கொள்ளையர்கள் யார் உள்ளனர் என்பதை அறிந்து அவர்களிடம் ரூ.2 இலட்சம் முதல் ரூ.3 இலட்சம் வரை பணத்தை கட்டணமாக கொடுத்து பயிற்சிக்கு அனுப்புகின்றனர். அவர்களுக்கு பிக்பாக்கெட், செயின் பறிப்பு, வீடு புகுந்து கொள்ளை, கூட்டமாக உள்ள விழாக்கள், கோயில்கள், திருமண நிகழ்வுகளில் எப்படி கொள்ளையடிப்பது என்பதை கற்றுத் தருகின்றனர்.
பயிற்சியும் கொடுத்து அவர்களை கொள்ளையடிக்க அனுப்பும் கொள்ளையர்கள், அதில் வரும் பணத்தில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ரூ.5 இலட்சம் வரை கொள்ளையடித்து தந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு வெகுமதியாக தருகின்றனர்.
இந்த கிராமங்களில் இருந்து அண்மையில் பயிற்சி பெற்ற ஒருவர் ஹைதராபாத்தில் தொழிலதிபர் இல்லத் திருமணத்தில் கைவரிசை காட்டி கிட்டத்தட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள நகைகள். ரூ.1 இலட்சம் ரொக்கம் ஆகியவற்றை அள்ளிச் சென்றிருக்கிறார்.
சம்பவத்தை கச்சிதமாக அரங்கேற்றிவிட்டு பணம், நகையுடன் சொந்த ஊரான கடியாவுக்கு போய்ச்சேர்ந்துள்ளார். பின்னர், அங்கிருந்து நேராக கன்வர் எனப்படும் சிவ யாத்திரையில் கலந்து கொண்டு, பொலிஸாரை திக்குமுக்காட வைத்துள்ளார்.
சம்பந்தப்பட்ட கிராமங்களுக்குச் சென்று குற்றவாளிகளை பிடிக்கச் செல்வது பொலிஸாருக்கு சவால் நிறைந்த பணியாக இருக்கிறது. அந்நியர்கள் அல்லது காவல்துறை சம்பந்தப்பட்ட நபராக இருப்பின் அவர்களை கைபேசியில் படம் எடுத்து, ஊரில் உள்ள அனைவருக்கும் அனுப்பி அவர்களை தயார் படுத்திவிடுகின்றனர். குறிப்பாக ஊருக்குள் இருக்கும் பெண்களுக்கு இது ஒரு தலையாய பணியாகவே ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், 300க்கும் மேற்பட்ட சிறார்கள் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று திருட்டு, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக கூறும் பொலிஸார், போதிய கல்வியறிவு இல்லாததே இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கின்றனர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
21 minute ago