Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2024 ஜூலை 18 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
குழந்தைகளை குறி வைத்து தாக்கும் ‛சந்திபுரா வைரஸ்’ தொற்றுக்கு குஜராத்தில் முதல் பலியாக 4 வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் புதிதாகப் பல்வேறு வைரஸ் நோய்கள் உருவாகி மக்களைத் தாக்கி வருகின்றன. அந்த வகையில், குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டத்தில் மொட்டா கந்தாரியா என்ற கிராமத்தில் குழந்தைகளைக் குறிவைத்து ‘சந்திபுரா’எனும் புதிய வகை வைரஸ், குழந்தைகளைத் தாக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று இவ்வகைத் தொற்றுக்கு முதல் பலியாக 4 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
இதை புனேவில் உள்ள என்.ஐ.வி. எனப்படும் தேசிய வைரலாஜி மையம் உறுதி செய்துள்ளதாக குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல் தெரிவித்தார்.
ஏற்கனவே 5 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 8 குழந்தைகள் ‘சந்திபுரா’ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உயிருக்குப் பேராபத்தை ஏற்படுத்தும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago