2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

குகேஷ் உட்பட நால்வருக்கு கேல் ரத்னா விருது

Editorial   / 2025 ஜனவரி 02 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய அரசின் விளையாட்டு துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கும் உயரிய விருதான கேல் ரத்னா விருது தமிழகத்தின் குகேஷ் உட்பட 4 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டில் இரண்டு பதக்கங்களை வென்ற மனு பாக்கர், உலக செஸ் சாம்பியன் டி குகேஷ், ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் பிரவீன் குமார் ஆகியோருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விளையாட்டு வீரர்களுக்கான கேல் ரத்னா விருதுகளை அறிவித்தது.

இம்மாதம் ஜனவரி 17ம் திகதி காலை 11 மணிக்கு டெல்லி ராஷ்டிர பதி பவனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவில் விருது பெற்றவர்கள் இந்தியக் குடியரசுத் தலைவரிடம் இருந்து கேல் ரத்னா விருதுகளைப் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் உயரிய விளையாட்டு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலில் முதலில் மனு பாக்கரின் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X