Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2024 ஜூலை 17 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிக்கிம் மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஆர்.சி.பௌடியாலின் உடல் மேற்கு வங்கத்தின் சிலிகுரி அருகே கால்வாயில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் காணமல் போன ஒன்பது நாட்களுக்கு பின்பு அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், “80 வயதான பௌடியால் உடல் புல்பாரியில் உள்ள டீஸ்தா கால்வாயில் மிதந்த போது கண்டெடுக்கப்பட்டது. முதல்கட்ட விசாரணையில், முன்னாள் அமைச்சரின் உடல் டீஸ்தா ஆற்றின் வழியாக கீழே கொண்டு வரப்பட்டிருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது. மேலும், அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம், உடைகளைக் கொண்டு அவர் அடையாளம் காணப்பட்டார்.
கடந்த ஜூலை 7ஆம் திகதி பாக்யோங் மாவட்டத்தில் உள்ள அவரின் சொந்த ஊரான சோட்டா சிங்டாமில் இருந்து காணாமல் போனார். அவரது மரணம் குறித்து விசாரணை நடைபெறும்” என்று தெரிவித்தனர்.
சிக்கிம் சட்டப்பேரவையின் முதல் துணை சபாநாயகராக இருந்த பௌடியா பின்னர் வனத்துறை அமைச்சராக இருந்தார். ரைசிங் சன் கட்சியின் நிறுவனரான அவர், 70, 80களில் இமயமலைப் பிரதேசத்தின் அரசியலில் முக்கியமான நபராக அறியப்பட்டார். அதே போல, சிக்கிமின் கலாசாரம் மற்றும் அதன் சமூக இயக்கம் பற்றிய ஆழ்ந்த புரிதலுக்காகவும் அறியப்பட்டார்.
இந்நிலையில், இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங், “சிக்கிம் அரசின் அமைச்சரும், ஜுல்கே காம் கட்சியின் நிறுவனரும், மூத்த அரசியல்வாதியுமான ஆர்.சி.பௌடில்யாவின் திடீர் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago