2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கார்ட்டூன் பார்த்த சிறுவன் செல்போன் வெடித்து படுகாயம்

Freelancer   / 2024 செப்டெம்பர் 01 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய பிரதேச மாநிலத்தில் கையில் வைத்திருந்த செல்போன் வெடித்துச் சிதறியதில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்த 9 வயது சிறுவன் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிந்த்வாரா மாவட்டத்தில் கல்கோட்டி திவாரி என்ற கிராமத்தில் வசிப்பவர் ஹர்த்யால் சிங். கூலித்தொழிலாளியான இவர் தமது மனைவியுடன் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது அவரது 9 வயது மகன் செல்போனை, சார்ஜ் போட்டபடியே தமது நண்பர்களுடன் கார்ட்டூன் பார்க்க ஆரம்பித்துள்ளார்.

கார்ட்டூனில் அவர் மூழ்கி இருக்க, திடீரென அந்த செல்போன் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. உடனடியாக சிறுவனை உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர்கள் முதலுதவிக்கு பின்னர் சிந்த்வாரா மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உரிய சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சிறுவன் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், கைகள், கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் தொடர் சிகிச்சை அவசியம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .