2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

காரில் பெண் சடலத்துடன் சுற்றிய இளைஞர்கள் கைது

Freelancer   / 2024 மே 12 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இளம்பெண் சடலத்தை காரில் வைத்துக்கொண்டு சுற்றித்திரிந்த இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு இரண்டு இளைஞர்கள் சந்தேகப்படும்படி காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்களை அம்மைநாயக்கனூர் பொலிஸார் சோதனை செய்தபோது, அவர்கள் பயணித்த காரில் இளம்பெண்ணின் சடலம் ஒன்று இருந்தது.

சடலம் குறித்து இருவரிடம் விசாரணை செய்த போது, அவர்கள் சொன்ன தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காரில் உள்ள பெண் சடலம், திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் உள்ள தனியார் மில் ஒன்றில் பணியாற்றி வந்த பிரின்சி என்பது தெரிய வந்தது.

இராமநாதபுரம் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர் திவாகர். திருமணமாகிய நிலையில் திவாகர் பல்லடத்தில் பணியாற்றி வந்துள்ளார். அப்பொழுது திவாகருக்கும் அங்கு வேலை பார்த்து வந்த மேற்குறிப்பிட்ட பெண்ணுக்கும் இடையே முறையற்ற உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விவரம் திவாகர் மனைவிக்கு தெரிந்துவிட்ட நிலையில் அதனைக் கண்டித்துள்ளார். இதனால் பிரின்சியிடம் தங்களுடைய உறவை முறித்துக் கொள்ளலாம் எனத் திவாகர் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பிரின்சி திவாகரிடம் அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திவாகர் அவரை கொலை செய்ய திட்டமிட்டு தன்னுடைய ஊரைச் சேர்ந்த உறவினர் இந்திராகுமார் என்ற இளைஞரை திவாகர் பல்லடம் அழைத்துள்ளார்.

பல்லடத்திற்கு காரில் வந்த இந்திரகுமாருடன் சேர்ந்து இருவரும் பிரன்சியை கொலை செய்தனர். பின்னர் சடலத்தை காரில் வைத்துக் கொண்டு சுற்றித்திரிந்த இருவரும் புதைப்பதற்காக இடத்தை தேடிக் கொண்டிருந்த பொழுது பொலிஸாரிடம் சிக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .