2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

Freelancer   / 2024 நவம்பர் 14 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெலுங்கு பேசும் பெண்களை அவதூறாகப் பேசிய வழக்கில்,  நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் பிராமணர்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது மதுரை திருநகர் போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கஸ்தூரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது,   கஸ்தூரியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .