Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2024 ஜூன் 23 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கள்ளக்குறிச்சியில் சட்டவிரோத மது விற்பனை செய்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி யான சிவகுமார் என்பவரை எம்ஜிஆர் நகரில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சியில் சட்டவிரோத மது விற்பனை செய்த நபர்களை பொலிஸார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இதுவரை சிபிசிஐடி பொலிஸார் 9 பேரை கைது செய்துள்ள நிலையில், நேற்று இரவு சென்னை அருகே உள்ள சிவகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் விஷ மது அருந்தியதால் தற்போதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விவகாரத்தில் முன்னதாகவே விஷ மது விற்பனை செய்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த கன்னுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், அவரின் மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், இரண்டாம் தரகராக மெத்தனாலை விற்பனை செய்த சின்னத்துரை, ஜோசப் ராஜா, மதன்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை விசாரணை செய்ததில் மாதேஷ் என்பவர்தான் தங்களுக்கு மெத்தனால் வழங்கியவர் என்ற தகவலை தெரிவித்தனர். இதையடுத்து சிபிசிஐடி பொலிஸார் மாதேஷிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கச்சிராப்பாளையத்தில் ராமர் என்பவரும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.
இந்தவகையில், 57 பேரின் உயிரிழப்பிற்கு காரணமாக விஷ மதுவுக்கு மெத்தனால் வழங்கிய முக்கிய குற்றவாளி சிவக்குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர் மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், எம்ஜிஆர் நகரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த சிவக்குமாரை நள்ளிரவில் சென்னை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து, சிபிசிஐடியினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் இவரின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற தொடர் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தவகையில், இதுவரை 10 பேர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago