Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2024 ஜூன் 04 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் பா.ஜ., அமோக வெற்றி பெறும் என கூறப்பட்ட நிலையில், ஜூன் முதலாம் திகதி கடைசி கட்ட தேர்தல் முடிந்த பிறகு அனைத்து கருத்துக்கணிப்புகளும் பா.ஜ.,வுக்கு சாதகமாகவே அமைந்தன.
பா.ஜ., தனி மெஜாரிட்டி உடன் ஆட்சி அமைக்கும், பா.ஜ., கூட்டணிக்கு 370க்கும் மேல் கிடைக்கும் என அனைத்து ஊடகங்களும் தெரிவித்தன. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும் எனக் கூறியிருந்தது.
இந்நிலையில், இன்று ஓட்டு எண்ணிக்கை நடந்த நிலையில், கருத்துக்கணிப்புகள் முடிவு அனைத்தும் தவிடு பொடியாகின. துவக்கத்தில் பா.ஜ., முன்னிலை பெற்றாலும் நேரம் செல்ல செல்ல, பா.ஜ., பின்னடைவைச் சந்தித்தது. அக்கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சியின் ஆதரவுடனேயே ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், மத்தியில் பாஜ., மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ள போதிலும், தனி மெஜாரிட்டி கிடைக்காதது அக்கட்சி தொண்டர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு உள்ளது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago