2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

கமலா ஹாரிஸ் வெற்றிக்காக சிறப்புப் பூஜை

Editorial   / 2024 நவம்பர் 05 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக் ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வாக வேண்டி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தில் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.

உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று (05)  நடைபெறுகிறது. அந்த நாட்டின் நேரப்படி நவம்பர் 5-ம் திகதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், அமெரிக் ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வாக வேண்டி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தில் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன. வாஷிங்டன்னில் இருந்து 13 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் குக்கிராமத்தில் கமலா ஹாரிஸுக்காக நடைபெறும் பூஜைகள் ஊடக கவனம் பெற்றுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .