Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 03 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.ஜ.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி ஆகிய 4 கட்சிகளை விமர்சித்து கருத்து தெரிவிக்க கூடாது என்று,அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசிய விஜய், ''2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுவது உறுதி. என்றாலும், கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்களிப்பு வழங்கப்படும்'' என்று வெளிப்படையாக அறிவித்தார். இது, தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
அதேநேரத்தில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வே விஜய் கட்சியுடன் கூட்டணி அமைத்தால் என்ன என்று யோசித்து வருகிறது. வலுவான கூட்டணியுடன் களம் இறங்கும் தி.மு.க.வை வீழ்த்த இதுபோன்ற கட்சியுடன் கூட்டணி அமைப்பது அவசியம் என்று அ.தி.மு.க. கருதுகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை (6), சென்னையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது.
இதற்கு மத்தியில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் மாநில நிர்வாகிகளுக்கும், செய்தி தொடர்பாளர்களுக்கும் வாய்மொழி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, பா.ஜ.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி ஆகிய 4 கட்சிகளை விமர்சித்து கருத்து தெரிவிக்க கூடாது என்று கூறியுள்ளார்.
'அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை' என்ற வகையில், தேர்தல் நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், முன்கூட்டியே அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி வாய்ப்பூட்டு போட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த உத்தரவு அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் பரபரப்பாக கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago