Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2024 செப்டெம்பர் 03 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
குஜராத்தில் கடலோர காவல்படையின் ஏஎல்எச் ஹெலிகொப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் எஞ்சிய 3 பேரை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. காணாமல் போனவர்களை தேட 4 கப்பல்கள், 2 ஹெலிகொப்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
குஜராத் மாநிலம், போர்பந்தர் கடற்கரையில் ஹரி லீலா என்ற மோட்டார் டேங்கரில் பணியாளர் ஒருவர் காயமடைந்திருந்தார். அவரை மீட்பதற்காக நேற்று (02-09-24) இரவு ஹெலிகொப்டர் ஒன்று அனுப்பப்பட்டது.
இந்திய கடலோரக் காவல்படையைச் சேர்ந்த 4 பேர் கொண்ட குழு பயணித்த அந்த ஹெலிகொப்டர், அரபிக்கடலில் அவசரமாக தரையிறங்கியபோது எதிர்பாராதவிதமாக கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதனால், பணியாளர்கள் 4 பேர் கடலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஹெலிகொப்டரின் விமானி மீட்கப்பட்ட நிலையில், கடலில் விழுந்து மாயமான 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago