2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஒரு மாதத்தில் திரும்பி வருவேன்: திருடன் கடிதம்

Freelancer   / 2024 ஜூலை 03 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சித்திரை செல்வின். இவரும் இவரது மனைவியும் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளனர்.

இவர்கள் கடந்த 17ஆம் திகதி, குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார்கள். அப்போது வீட்டை பராமரிப்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணிடம் வீட்டுச் சாவியை கொடுத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை வீட்டைப் சுத்தம் செய்ய வந்த செல்வி வீட்டின் கதவுகள் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் பொலிஸாருக்கும் சித்திரை செல்வினுக்கும் தகவல் தெரிவித்தார்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், வீட்டில் இருந்த 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், ஒன்றரை பவுன் எடை கொண்ட இரண்டு ஜோடி கம்மல், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து வீட்டில் பொலிஸார் சோதனையிட்டதில் திருடன் பேனாவால் ஒரு உருக்கமான கடிதம் எழுதி வைத்திருப்பதையும் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள். நான் இன்னும் ஒரு மாதத்தில் திருப்பி தந்து விடுகிறேன். என் வீட்டில் உடம்பு சரியில்லை, அதனால்தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட நபரை தேடிவருகின்றனர்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .