2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை

ஏஐ மூலம் பக்தர்கள் வருகை கணக்கெடுப்பு

Freelancer   / 2025 ஜனவரி 21 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா கடந்த 13ஆம் திகதி தொடங்கியது. தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சுமார் 45 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களை கண்காணிக்க முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை உ.பி. அரசு பயன்படுத்தி வருகிறது. 

பிரயாக்ராஜ் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான சிசிடிவி கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஏராளமான பொலிஸார், அதிகாரிகள், தொழில்நுட்ப நிபுணர்கள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

ஒவ்வொரு சதுர மீட்டருக்குள் எத்தனை பக்தர்கள் உள்ளனர் என்பதை எல்லாம் ஏஐ தொழில்நுட்பம் மூலம் கணக்கிட்டு வருகின்றனர். அத்துடன் களத்தில் இருந்தும் பக்தர்களின் எண்ணிக்கை குறித்து தகவல்கள் பெறப்படுகின்றன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X