Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 ஒக்டோபர் 23 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு லடாக்கில் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, இந்தியாவும் சீனாவும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதை இரு நாடுகளும் உறுதிபடுத்தியுள்ளன.
லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியா மற்றும் சீனாவின் இராணுவ வீரர்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, கிழக்கு லடாக்கின் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகளில் இரு நாட்டு இராணுவங்களும் படை வீரர்களை குவிக்கத் தொடங்கின.
இதனால் சுமார் நான்கு ஆண்டுகளாக கிழக்கு லடாக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த சூழலில், கிழக்கு லடாக்கில் பதற்றத்தை தணிக்கும் வகையில் சீனாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை தற்போது சீனாவும் உறுதி செய்துள்ளது.
இதன்படி, எல்லை விவகாரங்கள் குறித்து சமீப காலமாக சீனா மற்றும் இந்தியா இடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது இரு தரப்பினருக்கும் இடையே ஒரு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த தீர்மானங்களை அமல்படுத்துவதற்கு இந்தியாவுடன் இணைந்து சீனா செயலாற்றும் என்று, சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago