2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ஏறிய லொறி: ஐவர் பலி; எழுவர் படுகாயம்

Freelancer   / 2024 நவம்பர் 26 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரள மாநிலம் - திருச்சூர் அருகே உள்ள நாட்டிகை பகுதியில், இன்று (26) அதிகாலை இடம்பெற்ற விபத்தில், 2 குழந்தைகள் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நாட்டிகை பகுதியில், நெடுஞ்சாலைசாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக அவ்வழியாக வரும் வகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. வீதிப்பணி நடைபெறும் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில், வீதியோரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்த பகுதியில் தமிழகத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் உறங்கிக்கொண்டிருந்தனர். 

அப்போது மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த லொறி, தடுப்புகளை உடைத்துக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ஏறி விபத்தை ஏற்படுத்தியது.

இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருச்சூரில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்தை ஏற்படுத்திய லொறி சாரதி மற்றும் உதவியாளரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சாரதி மதுபோதையில் லொறியை செலுத்தியது தெரியவந்துள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X