2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை

உயிரிழந்த குடும்பத்துக்கு ரூ.25 இலட்சம் நிவாரணம்

Freelancer   / 2025 ஜனவரி 30 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது.

அதில் 25 பேரது உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும்,  60 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 36 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏனையோர் சிறிய சிகிச்சைக்கு பின்னர் அவர்களது குடும்பத்தினருடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் லக்னோவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்,

 "பிரயாக்ராஜில் 9 கோடி பேர் குவிந்துள்ளனர். கங்கை நதிக்கரையில் அகாரா மார்க்கில் உள்ள தடுப்புகளை சில பக்தர்கள் தாண்டிச் சென்றபோது, இந்த துயரம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. 

“மேலும், அகாரா பரிஷத் தலைவர்களிடம் பேசி, நெரிசல் குறைந்த பின்னர் நீராட அனுமதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்களது முதல் பணி.

“நெரிசலை தவிர்க்க பக்தர்கள் அருகில் உள்ள கங்கை நதிக்கரையில் நீராட வேண்டும். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 25 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.  தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது" என்று கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X