Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 25 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தர பிரதேச மாநிலம், சம்பல் நகரில் உள்ள முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஜமா மசூதியை ஆய்வு செய்ய சென்றபோது அதிகாரிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இது கலவரமாக மாறியதில் 3 பேர் உயிரிழந்தனர். 30 பொலிஸார் காயமடைந்தபேர்.
இந்த நிலையில், அப்பகுதியில் நேற்று (25), பாடசாலைகளுக்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பல் பகுதியில், 24 மணி நேரத்துக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் கற்கள், சோடா பாட்டில்கள் அல்லது வெடிக்கக் கூடிய பொருட்களை வாங்கவோ பதுக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பல் பகுதிக்குள் வெளியாட்கள், சமூக அமைப்புகளைச் சார்ந்தோர், மக்கள் பிரதிநிதிகள் முன் அனுமதியின்றி வரக்கூடாது எனவும் தடை விதித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், சம்பல் நகரில் ஜமா மசூதி கட்டப்படுவதற்கு முன்பாக அந்த இடத்தில் இந்து கோவில் இருந்ததாகவும், எனவே அந்த இடத்தில் ஆய்வு நடத்தி உண்மை தன்மையை சரிபார்க்க கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து, அந்த மசூதியில் ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வதற்காக சம்பல் பகுதியில் உள்ள ஜமா மசூதிக்கு, ஞாயிற்றுக்கிழமை (24) காலை சென்றனர்.
அப்போது, அங்கு கூடியிருந்த மக்கள், மசூதியில் ஆய்வு நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மசூதியை ஆய்வு செய்வதில் அதிகாரிகள் உறுதியாக இருந்தனர்.
இதையடுத்து, அந்த பகுதியில், போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கும் இடையே மோதல் வெடித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
58 minute ago
1 hours ago