Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 28 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருமணம் செய்யாமல் 'லிவ்-இன்' உறவில் இருந்த இளம்பெண்ணை, இளைஞன் ஒருவர் 50 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவமொன்று, மகாராஷ்டிரா - ஜார்க்கண்ட் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குந்தி மாவட்டத்தின் ஜோர்டாக் கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ் பெங்ரா (வயது 25) என்பவர், 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஒரு கசாப்பு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜார்க்கண்ட் திரும்பியுள்ளார்.
திருமணமான குறித்த நபர், அப்பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவருடன், தனக்கு திருமணமானதை மறைத்து தொடர்பில் இருந்துள்ளார். அத்துடன், தனியாக அந்த பெண்ணுடன் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த 8ஆர் திகதியன்று அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த குறித்தநபர், அந்த பெண்ணை ஜோர்டாக் கிராமத்தில் தனது வீட்டருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அந்தப் பெண்ணை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற குறித்த நபர், அந்தப் பெண்ணை கற்பழித்த பின், அந்தப் பெண்ணின் உடலை 40 முதல் 50 துண்டுகளாக வெட்டி விட்டு, காட்டில் விலங்குகளுக்கு வீசி சென்றுள்ளார்.
இந்த நிலையில், காட்டுப் பகுதியில் பெண் ஒருவரின் உடல் துண்டு துண்டாக கிடந்துள்ளதை பார்த்த அப்பகுதி மக்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
விசாரணைகளை முன்னெடுத்த னொலிஸார், குறித்த நபரை கைது செய்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
51 minute ago
2 hours ago
2 hours ago