2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.70 கோடி போதைப்பொருள் பறிமுதல்

Freelancer   / 2024 ஜூலை 29 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இந்திய மதிப்பில் சுமார் ரூ.70 கோடி மதிப்புள்ள 6.9 கிலோ மெத்தம் பெட்டமைன் போதைப்பொருள் மற்றும் ரூ.7 இலட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு தென்மண்டல போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விரைந்தனர்.

இந்நிலையில், இராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.70 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்த நிலையில், இது தொடர்பாக இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பைசூல் ரஹ்மான் மற்றும் இப்ராஹிம், மன்சூர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களிடம் இருந்து ரூ.7 இலட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட அதேநேரம், விசாரணையில் செங்குன்றம் அருகே குடோனில் போதைப்பொருட்களை பதுக்கி வைத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .