2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Freelancer   / 2024 ஜூலை 10 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ரிக்டர் அளவுகோலில் இது 4.5-ஆக பதிவாகியுள்ளது.

காலை 7.14 மணியளவில் நிகழ்ந்துள்ள இந்த நிலநடுக்கம், ஹிங்கோலியில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல் அளித்துள்ளது.

இதனால் ஹிங்கோலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளில் இலேசான அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இதனிடையே மகாராஷ்டிராவில் நிலநடுக்கம் ஏற்பட்ட 3 மணி நேரத்தில் இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ள அதேசமயம், இந்திய பெருங்கடலில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் இது பதிவாகியுள்ளது.

குறிப்பாக இந்திய பெருங்கடலில் தென்னாபிரிக்காவுக்கு தெற்கே அதாவது கேப் டவுன் நகரத்தில் இருந்து 2,500 கிமீ தொலைவில் கடலின் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக பெரியளவில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்ற போதிலும், நிலநடுக்கம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .