Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் 78ஆவது சுதந்திரமான இன்று, நாடு முழுவதும் சுதந்திர தின விழா, உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், புதுடெல்லி, செங்கோட்டையில் இன்று சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. காலை 7.30 மணிக்கு பிரதமர் மோடி புதுடெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, தொடர்ந்து 11ஆம் முறையாக சுதந்திர தின விழாவில் தேசிய கொடியேற்றிய பெருமையை பெற்றார்.
விழாவில், முப்படை வீரர்கள், துணை இராணுவப்படையினர் மற்றும் என்.சி.சி., மாணவர்களின் அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் நடந்ததோடு, இராணுவத்தினர் அளித்த அணிவகுப்பு மரியாதையை மோடி ஏற்றுக்கொண்டார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய தலைநகரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து பொலிஸார் , 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும், நாட்டின் அனைத்து மாநில தலைநகரங்களிலும் சுதந்திர தின கொடியேற்ற விழா உற்சாகமாக நடந்தன. அந்தந்த மாநில முதல்வர்கள் தேசிய கொடியேற்றி வைத்து கொண்டாடினர்.
இந்நிலையில், இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். “ஜெய் ஹிந்த்” என சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்த அதே சமயம், அவர் புதுடெல்லி ராஜ்கோட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
56 minute ago
1 hours ago