2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

இந்திய மாணவர்களால் அமெரிக்காவுக்கு பல கோடி வருவாய்

Freelancer   / 2025 பெப்ரவரி 16 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களால் அந்த நாட்டுக்கு ஆண்டுதோறும் ரூ.69,000 கோடி வருவாய் கிடைப்பதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா முழுவதும் சுமார் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். அவர்கள் மூலம் அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் ரூ.69,000 கோடி வருவாய் கிடைக்கிறது. இந்திய மாணவர்களால் அமெரிக்காவில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன.

அமெரிக்காவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் சீனர்கள் முதலிடத்தில் இருந்தனர். கொரோனா பெருந்தொற்று, அமெரிக்கா-சீனா இடையிலான உறவில் விரிசல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில ஆண்டுகளில் சீன மாணவ, மாணவியரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது.

 தற்போதைய நிலையில் இந்திய மாணவ, மாணவியரே அமெரிக்க கல்வி நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.   

 ஆனால் இந்திய மாணவர்களால் அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் ரூ.1,213,35 கோடி வரை வருவாய் கிடைக்கிறது என்று தனியார் பொருளாதார வல்லுநர்கள் கணித்து உள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .