2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

இண்டிகோவுக்கும் வெடிகுண்டு மிரட்டல்

Editorial   / 2024 ஒக்டோபர் 14 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏர் இந்தியா விமானத்தை அடுத்து இண்டிகோ விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மும்பையில் இருந்து நியூயோர்க் நகருக்கான ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து அந்த விமானம் புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டது.

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள புதுடெல்லி விமான நிலைய டிசிபி (ஐஜிஐ) உஷா ரங்னானி, “விமானம் தற்போது இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. விமானத்தில் உள்ள பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளும் கண்டிப்புடன் பின்பற்றப்படுகின்றன.” என்று குறிப்பிட்டுள்ளார்.

 இதனிடையே, மும்பையில் இருந்து மஸ்கட் மற்றும் மும்பையில் இருந்து ஜெட்டா செல்ல வேண்டிய இரண்டு இண்டிகோ விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. அந்த விமானங்களில் இருந்த பயணிகள், பணியாளர்கள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்புக்கான பல்வேறு குழுக்கள், வெடிகுண்டுகள் உள்ளனவா என்பதை கண்டறியும் நோக்கில் விமானங்களை முழுமையாக பரிசோதித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .