2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்

Freelancer   / 2024 டிசெம்பர் 10 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜஸ்தான் மாநிலம், தவுசா மாவட்டத்தில், திங்கட்கிழமை (9), திறந்தவெளி ஆழ்துளை கிணற்றில், 5 வயது சிறுவன் தவறி விழுந்துள்ளான்

இந்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆர்யன் என்ற குறித்த சிறுவன் கலிகாட் கிராமத்தில் உள்ள வயல்வெளியில், திங்கட்கிழமை (9) பகல், விளையாடிக் கொண்டிருந்த போது, 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.

இது குறித்து அறிந்த தேசிய மீட்பு படையினர், அங்கு விரைந்து சென்று சிறுவனை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

முன்னதாக குழாய் மூலம் சிறுவனுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டுள்ள கமெராவின் மூலம் சிறுவனின் நடவடிக்கையை கண்காணித்து வருவதாக, மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X