2025 ஜனவரி 10, வெள்ளிக்கிழமை

ஆழ்துளை கிணற்றில் விழுந்த பெண் உயிரிழப்பு

Freelancer   / 2025 ஜனவரி 08 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டம் புஜ் தாலுகா பகுதியிலுள்ள கண்டேரய் கிராமத்தில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த பெண் உயிரிழந்துள்ளார்.

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டம் புஜ் தாலுகா பகுதியிலுள்ள கண்டேரய் கிராமத்தைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவர், திங்கட்கிழமை (6) காலை ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்தார்.

 இதையடுத்து, தீயணைப்புப் படையினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் (என்டிஆர்எப்) சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உறுதுணையாக எல்லை பாதுகாப்புப் படையினரும் (பிஎஸ்எஃப்) செயற்பட்டனர்.

திங்கட்கிழமை (6) தொடங்கிய மீட்புப் பணி, செவ்வாய்க்கிழமை (7) வரை தொடர்ந்தது. இந்நிலையில் 33 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் இளம்பெண் மீட்கப்பட்டார். உடனடியாக அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X