Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Janu / 2024 ஓகஸ்ட் 14 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொல்கத்தா பெண் டாக்டரை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குற்றவாளியான சஞ்சய் ராய் தொடர்பில் பகிரப்பட்ட தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
குறித்த நபர் 4 பெண்களை திருமணம் செய்து அவர்களை பலவகையில் சித்திரவதை செய்தவர் என தெரியவந்துள்ளது.
அவரின் தொலைப்பேசியை பொலிஸாரால் ஆய்வு செய்த போது குறித்த அதில் ஆபாச படங்கள் மட்டுமல்லாமல் இயற்கைக்கு மாறான பாலியல் உறவு சார்ந்த வீடியோக்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது .
அவர் உயர் பொலிஸ் அதிகாரிகள் மட்டுமல்லாமல், பல்வேறு மருத்துவமனை அதிகாரிகளுடன் நெருக்கமான பழக்கம் கொண்டவர் என்பதால் அனைத்து துறைகளிலும் தவறுகள் செய்ய தடையின்றி அணுக வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளார் .
மேலும் , அவர் தற்போது தன்னுடைய குற்றத்தை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளதுடன் அவரது முகத்தில் எந்தவிதமான வருத்தமும், பதட்டமும் இல்லாமல் "நீங்கள் ஆசைப்பட்டால் என்னை தூக்கில் கூட போடுங்கள்" என கூறியுள்ளார் எனவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளது .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago