Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2024 ஓகஸ்ட் 13 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக வந்த நபரின் வயிற்றில் கருப்பை மற்றும் கருமுட்டை ஆகியவை இருப்பதை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுபற்றி மேலும் தெரியவருகையில், உத்தரப் பிரதேசம் மாநிலம் கோரக்பூரை சேர்ந்தவர் 46 வயதான ராஜ்கிர் மிஸ்திரி.
இவர் கடந்த ஒரு வாரமாகவே கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து பரிசோதனையில், அவரது அடிவயிற்றில் உள்ள சதை உள்ளுறுப்புகளுடன் இணைந்து காணப்பட்டுள்ளது.
எனவே அவருக்கு ஹெர்னியா எனப்படும் குடலிறக்கத்திற்கான அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்தனர். அறுவை சிகிச்சையில் பெண்களுக்கு இருக்கும் கருப்பை அவருக்கு இருப்பது தெரியவந்துள்ளது.
முழுமையாக வளர்ச்சி அடையாத அந்த கருப்பையுடன் கரு முட்டையை உருவாக்கும் ஓவரியும் இருந்துள்ளது. ராஜ்கிரிடம் பெண் தன்மைக்கான கூறுகள் எதுவும் காணப்படாத நிலையில் பெண்ணின் கருப்பை வளர்ச்சியைப் பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து அவரின் கீழ் வயிற்றில் இருந்த ஓவரி மற்றும் கருப்பையை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியதையடுத்து ராஜ்கிர் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago