2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை

Freelancer   / 2024 டிசெம்பர் 05 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அசாம் மாநிலத்தில், மாட்டிறைச்சிக்குத் தடை விதிப்பதாக, அம்மாநில முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.

அசாமில் திருத்தம் செய்யப்பட்ட கால்நடை பாதுகாப்புச் சட்டம் 2021இன் படி, இந்துக்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய இடங்கள் மற்றும் கோவில்களை சுற்றி 5 கிலோமீற்றர் சுற்றளவில் கால்நடைகளை அறுப்பதும், இறைச்சியை விற்பதும் குற்றமாகும்.

இந்தச் சட்டத்தை திருத்தி, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

 அதன்படி, அசாம் மாநிலத்தில் உணவகங்கள், விடுதிகள், பொது இடங்களிலும் மாட்டிறைச்சி சமைப்பதற்கும் உண்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறுபவர்களுக்கு, 3 முதல் 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 3 முதல் 5 இலட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாட்டிறைச்சி தடைக்கு அசாம் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X