Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Janu / 2024 ஜனவரி 16 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி பன்விலை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (14) வாஸ்து சாந்தி கிரியையுடன் ஆரம்பமாகி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந் நிலையில் திங்கட்கிழமை (15) மாலை புஸ்பாஞ்சலி திருவிழாவில் றக்ஸாவ தோட்டத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி இறுதி ஆண்டு மாணவன் காளிதாஸ் சசிகுமார் கௌரவிக்கப்பட்டுள்ளதுடன் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளது.
கலசத் திருவிழா செவ்வாய்க்கிழமை (16) 108 நடைபெற்றுள்ளதுடன் புதன்கிழமை (17) கற்பூரத் திருவிழா , வியாழக்கிழமை காலை திருவிளக்குத் திருவிழா , வெள்ளிக்கிழமை (19) மாலை குபேரலட்சுமி திருவிழா , சனிக்கிழமை (20) காலை லட்சார்ச்சனை , ஞாயிற்றுக்கிழமை (21) மாலை மாவிளக்குத் திருவிழா , அடுத்தநாள் திங்கட்கிழமை (22) மாம்பழத் திருவிழா, செவ்வாய்க்கிழமை (23) பறவைக்காவடி ஊர்வலம் தீ மிதிப்பு வைபவம் மகேஸ்வரா பூசையுடன் அன்னதானம் வழங்கப்பட்டு இரவு வேட்டைத் திருவிழா , அடுத்த நாள் புதன்கிழமை (24) பகல்பொழுதில் சங்காபிஷேக நிகழ்வு , பால்குட பவனி , மகேஸ்வர பூலசயுடன் அன்னதானம் மற்றும் மாலை ஸ்ரீ விநாயகப் பெருமான் சித்திரத் தேரில் ஊர்வலம் இடம்பெறும்.
அத்துடன் 25ஆம் திகதி தீர்த்த உற்சவமும் கொடியிரக்கமும் இந்து இளைஞர் மன்றத்தின் அனுசரணையில் பூங்காவனத் திருவிழாவும் நடைபெற்று வெள்ளிக்கிழமை மாலை வைரவர் மடையுடன் திருவிழா நிறைவுறும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago