Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Mayu / 2024 ஜனவரி 31 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் மாசிமகம் திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது என தேவஸ்தான செய்தி தொடர்பாளர் தியாகராஜ கிஷோகுமார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
சோபகிருது வருடம் தைமாதம் 19ம் நாள் (02.02.2024) வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்கு கொடி ஊர்வலமும், காலை 11.00 மேல் துவஜாரோகணமும் (கொடியேற்றம்) மாசி மாதம் 12ம் நாள் (24.02.2024) சனிக்கிழமைகாலை மக நட்சத்திரத்தில் பஞ்சரதபவனியும், மாசி மாதம் 14ம் நாள் (26.02.2024) திங்கட்கிழமை காலை தீர்த்தோற்சவமும், அன்றிரவு துவஜஅவரோகணமும் (கொடியிறக்கம்) நடைபெற திருவருள் பாலித்துள்ளது.
இந்த சகல புனித நிகழ்வுகளிலும் அம்பிகையடியார்கள் ஆசாரசீலர்களாக வருகை தந்து அம்பிகையின்அருட்கடாட்சத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆலய பரிபாலன சபை தலைவர் விக்கினேஸ்வரர் சர்வானந்தா, செயலாளர் செல்லையா ஜெயராஜ், பொருளாளர் பெரியசாமி மனோகரன், மற்றும் சகலபரிபாலன சபை உறுப்பினர்களும் கேட்டுகொண்டுள்ளார்கள்.
02.02.2024 முதல் 27.02.2024 வரை பகல் 11.00 மணிக்கும், மாலை 7.00 மணிக்கும் சுவாமி உள்வீதி வெளிவீதிவந்து அருள்பாலிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
15 minute ago
2 hours ago