Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 28 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலை மாணிக்க பிள்ளையார் ஆலயத்தின் உடைய சப்பற திருவிழா நேற்றைய தினம்(27) மிக சிறப்பாக இடம்பெற்றது.
செம்மலை மாணிக்கப் பிள்ளையார் ஆலய சிவாச்சாரியார் கலாகரகுருக்கள் தலைமையில் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதை தொடர்ந்து
இரவு 6.30 மணிக்கு வசந்த மண்டப பூசைகள் ஆரம்பமானது அதனை தொடர்ந்து எம்பெருமான் உள்வீதி உலாவந்து சப்பறத்தில் ஏறி வெளி வீதி உலா வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்
இந்த சப்பற திருவிழாவிலே பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானின் அருள் ஆட்சிகளை பெற்றுக் கொண்டனர்
கடந்த 15.09.2023 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான செம்மலை மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தினுடைய உற்சவங்களின் 13 வது உற்சவமாக இந்த சப்பற திருவிழா நேற்று (27) இடம் பெற்றதோடு இன்றைய தினம்(28) தேர்த்திருவிழாவும் நாளைய தினம்(29) தீர்த்தோட்சவத்துடன் ஆலய உற்சவம் இனிதே நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago