2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ’தைப்பூசம்’ நிகழ்வு!

Freelancer   / 2025 பெப்ரவரி 12 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்துக்களின் முக்கிய சமயச் சடங்குகளில் ஒன்றான தைப்பூச நிகழ்வு ​நேற்றைய தினம் (11) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.

முருகப்பெருமானுக்கு அனுஷ்டிக்கப்படும் விரதங்களில் முக்கியமான விரதமாக 'தைப்பூசம்' இந்துக்களின் சமயச் சடங்காக பண்பாட்டு விழுமியங்களுடன் நடைபெறுகின்றமை முக்கியமான அம்சமாகும்.

மும்மாரி பொழிந்து வயல்நிலம் செழிர்த்து அறுவடையின் ஆரம்பமாக தைப்பூசத்தில் புதிர் எடுத்து அவற்றில் பொங்கல் பொங்கி வழிபடுகின்றமை தமிழர் தம் பாரம்பரியத்தின் மரபியல் நடைமுறையாகும்.  இந்த நெறிமுறையோடு இன்றையதினம் தைப்பூச நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

குறித்த நிகழ்வானது மாவட்ட நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .