Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 27 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் கௌதம புத்தரால் வடிக்கப்பட்டு, பர்மாவைச் சேர்ந்த ஊ.பா. கின் அவர்களிடமிருந்து கற்று, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் விபாசனா கற்று தந்த திரு ச. கோயங்கா அவர்களால் நடத்தப்படும் மனத்தூய்மைக்கான தியான முறை பற்றி அறிமுகம் செய்யப்படவுள்ளது,
குறித்த பயிற்சி குருஜி எஸ்.என் கோயங்கா அவர்களின் வழிவந்த தியான ஆசிரியர்கள், திரு சுப்பிரமணியம், திருமதி.ஜானகி மற்றும் திரு சிவக்குமார் அவர்களும் தமிழ், ஆங்கில மொழிகளில் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 10ம்திகதி வரை தியான பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்காக நாளையதினம் (28) நாட்டிற்கு வருகின்றனர்.
இவர்களது பயிற்சி நெறி வௌ்ளிக்கிழமை (29) காலை 10:30 - 1:30 வரை நுவரெலியா காயத்ரி பீடத்திலும், மாலை 3 மணி முதல் 4 மணி வரை இளைஞர்களுக்கான நிகழ்ச்சி, ஹவெலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலிலும் நடைபெறவுள்ளது.
(30) திகதி சனிக்கிழமை, மாலை 4 - 6 மணி வரை லபுகல, பம்பரகல தோட்டக் கோவிலும், 1 ஒக்டோபர், காலை 9 - 10 மணி வரை நுவரெலியா காயத்ரி பீடத்திலும் அறநெறி மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
கோயங்கா ஜி யின் சிஷ்யர்களான சுப்பிரமணியம், ஜானகி சுப்பிரமணியம் ஒருங்கிணைக்கும் இப்புனித நிகழ்வை நுவரெலியா லயன்ஸ் கிளப், நுவரெலியா ரொட்ரிக் கிளப்இ நுவரெலியா காயத்ரி பீடம் நுவரெலியா இந்து கலாச்சார பேரவை, நுவரெலியா வர்த்தக சங்கம், கொஸ்கம - தம்மா சோபா தியான மையம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.
மனத்தூய்மைக்கான இந்த தியான பயிற்சி நெறியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago