2024 டிசெம்பர் 12, வியாழக்கிழமை

பாதயாத்திரை குழுவினர் நாளை நிலாவௌியில்

Mayu   / 2024 மே 26 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

யாழ்ப்பாணம் சந்நதி - கதிர்காம ஜெயாவேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினர்  சனிக்கிழமை(25) கொக்கிளாயில் இருந்து இயந்திரப் படகுகள் மூலம்  புல்மோட்டை சென்றடைந்துள்ளனர்.

குறித்த குழுவினர் எட்டு படகுகளில் 124 அடியார்கள் தமது பயணத்தை மேற்கொண்டு கொக்கிளாயிலிருந்து தென்னமரவாடிக்கு ஊடாக வந்து அங்கிருந்து 16 கிலோமீட்டர் தூரம் நடந்து புல்மோட்டையை அடைந்தனர்.

கடந்த 11ஆம் தேதி யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த இந்த பாதயாத்திரை சனிக்கிழமை(25) 15-வது தினமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய ஞாயிற்றுக்கிழமை  (26)  திரியாயை அடைந்த குழுவினர்  திங்கட்கிழமை (27) நிலாவெளியை சென்றடைவா​ர்கள் என்பதும் குறிப்பட்டத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .