2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

கதிர்காமம் பாதயாத்திரை மே. 30 ஆரம்பம்

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 10 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் கதிர்காமம் பாதயாத்திரை மே மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

யாழ்.செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகும் ஜெயா வேல்சாமி தலைமையிலான  மிக நீண்ட 59 நாள்  பாதயாத்திரை யூலை மாதம் 26ஆம் திகதி கதிர்காமத்தை சென்றடையும்.

அதற்கான முன் ஏற்பாடு ஒழுங்கு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப் புனித பாதயாத்திரைக் குழுவில் பக்தி பூர்வமான முறையில் பங்குபெற விரும்பும் அடியார்கள் ( 0763084791 ) குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்என் தலைவர் ஜெயா வேல்சாமி தெரிவித்தார்.

மகிமைகள் பொருந்திய இவ்வருட 2025 கதிர்காம ஆடிவேல் விழா உற்சவம் ஜூலை 26ம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு ஆகஸ்ட் 9ம் திகதி சனிக்கிழமை தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

வைப்பக படங்கள்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X