Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Mayu / 2024 நவம்பர் 17 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் கொழும்பு மாநகரில் அளுத்மாவத்தை வீதியில் அமைந்துள்ள ஆனந்த ஐயப்பன் திருக்கோவில் இலங்கையில் மிகவும் புகழ்பெற்ற ஆலயமாகும். கார்த்திகை மாதம் முதலாம் திகதி மாலை அணிந்து இங்கு இருமுடி கட்டி படியேறும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது
கேரள மாநிலம் சபரிமலை திருக்கோவில் போன்று 18 படியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயம் கடந்த 24 ஆண்டுகளாக மேல சாந்தி நம்பூதிரிகளால் மிகவும் சிறப்பான வழிபாட்டு தளமாக இலங்கை வாழ்பக்தர்களின் முக்கியமான ஆலயமாக அமைந்துள்ளது.
கார்த்திகை மாதம் விரதமிருந்து வரும் அடியார்களுக்கு அருள் பாவித்து சாஸ்தாவின் புகழ்பாடும் ஒரு ஆலயமாக அமைந்துள்ளது.
சபரிமலையில் நடக்கும் தின பூசைகள் போல் மேல் சாந்தியால் பூஜைகள் நடத்தப்பட்டு அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றது. சனிக்கிழமை நாட்களில் மிக விமர்சயாக மாலை அலங்காரத்துடன் நடைபெறும், படிபூஜை பார்க்க மிகவும் கண்கொள்ள காட்சியாகும்.
2019 கொரோனாவை தொடர்ந்து ஆண்டு தோறும் பக்தர்களின் எண்ணிக்கை, மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை செல்ல முடியாத பக்தர்கள், அளுத்மாவத்தை ஆலயத்தில் படியேறும் வாய்ப்பு வசதிகளை ஆலயத்தின் அறங்காவலர் ராஜு சிவ ராமன் தலைமையில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
பிரம்மஸ்ரீ கண்டரு மகேஸ்வரு சபரிமலை தலைமை அதியுயர் தந்திரி, அவர்களின் ஆன்மீக கிரியைகள் உடன், இப்புனித திருத்தலத்திற்கு தென்னிந்திய பாடகர் பத்மஸ்ரீ Dr. K.J. ஜேசுதாஸ்,அமரர்களானபெரி. முத்துசாமி,குருநாதர் கனகரட்ணம் ரவீந்திரகுமார், மற்றும் அறங்காவலர் ராஜூ சிவராமன், நிர்வாக சபை உறுப்பினர்களின் பெரும் முயற்சியால் 05-04-1993 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது
அதைத் தொடர்ந்து கட்டிடகலை நிபுணர் ராஜு சிவராமனின் அவர்களின் தலைமை முகாமைத்துவத்தின் கீழ். ஸ்தபதி சந்தணகுமாரின் சிற்ப கலையில் கோவில் நிர்மாணிக்கப்பட்டு 15-07-2002ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக கிரியா பூஜைகள் யாவும் சபரிமலை அதியுயர் தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரு மகேஸ்வரு அவர்களின் தலைமையின் கீழ், மேல் சாந்திரிகளாலும் தந்திரிக முறைப்படி, கேரள செண்டை பஞ்சவாத்தியம் முழங்க பூஜைகள்யாவும் நடைபெற்று ஐயன், ஆனந்த ஐயப்பனாக பிரதிஸ்ட்டை செய்யப்பட்டு திருவருள் பாலித்தது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஆனிமாதம் வருஷாபிஷேக கொடியேற்ற தீர்த்த ஆராட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வுகள் யாவும் சபரிமலை தலைமை தந்திரியின் தலைமையின் கீழ். ஆலய மேல் சாந்திகளால் சத்தியமான பொன்னு 18ம் படி பூஜை மற்றும் அனைத்து பூஜைகளும் கேரள செண்டை பஞ்சவாத்தியத்துடன் நடைபெற்று வருகிறது.
2011 ஆண்டில் ஆலயத்தின் கொடிஸ்த்தம்பம் புதிதாக புனரமைக்கப்பட்டு பிரதிஸ்ட்டை செய்யப்பட்டது. இது முன்னர் இருந்ததைவிட 39அடி உயரமாக புனர்நிர்மானம் செய்யப்பட்டது. அத்தோடு சத்தியமான பொன்னு 18ம் படியும் புனர்நிர்மாணிக்கப்பட்டது.
இந்த ஆலயம் அமைவதற்கு அறங்காவலர் ராஜூ சிவராமனுக்கு பக்கதுணையாக இருந்து இன்னும் செயல்பட்டுவரும் தற்போதைய முக்கியமான நிர்வாக சபை உறுப்பினர்களானக.கணேஷமூர்த்தி, வி.மனோரஞ்சன், சி.ஆனந்தீஷ்வரன், அ.ரமேஷ், சி. தியாகராஜ், அருணாச்சலம் பால்ராஜ் ஆகியோர் தோன்றா துணையாக நின்று திருப்பணிகளை செய்துவருகின்றனர்.
ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஐயப்ப சுவாமியின் காவல் தெய்வங்களான கருப்பு சுவாமி, கடுத்த சுவாமிக்கு விசேட திரவிய அபிஷேக அலங்கார பூஜை நடைபெறுகிறது. இதுஅவரை குலதெய்வமாக வழிபடுவோருக்கு மிக முக்கியமான பூஜையாக இருக்கிறது.
அதுபோல் நாகராஜ பிரபுவுக்கு அவருடைய ஜென்ம நட்சத்திரமாகிய ஆயிலிய நட்சத்திரத்தில் விசேட பூஜை ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிறது. இது நாகதோஷம்,திருமணதடங்கல், மாங்கல்ய தோஷம், தீராத நோய்கள் உள்ளவர்களுக்கு நிவர்த்தி கிடைத்திருக்கிறது.
கார்த்திகை மாதம் முதலாம்திகதி ஐயப்ப சுவாமிக்கு விரதம் இருக்கும் சாமிமார்களுக்கு மாலை அணிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து 60நாட்கள் விசேட பூஜைகள், பஜனை நடைபெற்று அன்னதானம் வழங்கப்படுவதை மண்டல பூஜை என்பார்கள். இருமுடி கட்டி, நெய் அபிஷேகம் செய்வதற்கு ஐயப்ப விரதமாலை அணிந்த சுவாமிமார்களுக்கு சத்தியமான பொன்னு 18ம் படி ஏறுவதற்கு மண்டல பூஜை அன்றும்,(கார்த்திகை முதல் திகதியிலிருந்து 41ம் நாள்) ஜனவரி முதலாம் திகதியும் ஜனவரி 14ம் திகதியும் (மகரஜோதி) வாய்ப்பு அளிக்கப்படும். சபரிமலைக்கு போக முடியாத ஐயப்ப விரதமாலை அணிந்த சாமிமார்கள் இங்கு சத்தியமான பொன்னு 18ம் படி ஏறி நெய் அபிஷேகம் செய்து விரதத்தை பூர்த்தி செய்கிறார்கள். இது இலங்கைவாழ் ஐயப்ப சுவாமி பக்தர்களுக்கு கிடைத்திருக்கும் பெரிய வரப்பிரசாதமாகும்.
அதை தவிர ஆவணி திருவோணம், சித்திரை விசு நாட்களிலும் ஐயப்ப விரத மாலை அணிந்து பக்தர்கள் சபரிமலை செல்கிறார்கள். வசதி இல்லாதவர்கள் இங்கு இருமுடி கட்டி சத்தியமான பொன்னு 18ம் படி ஏறி நெய் அபிஷேகம் செய்து விரத பூர்த்தி செய்துகொள்கிறார்கள்.
தினமும் காலையில் விநாயகருக்கு கணபதி ஹோமம், அதனை தொடர்ந்து ஆனந்த ஐயப்ப சுவாமிக்கு பஞ்ச திரவிய அபிஷேகம் நடைபெறுகிறது. இதை உபயமாக மெய்யடியார்கள் செய்து வருகிறார்கள். பூஜைகள் யாவும் கேரள ஆலய மேல் சாந்திகளால் தந்திரிக முறைப்படி நடைபெற்றுவருகின்றன.
எச்எச்விக்கிரமசிங்க
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago