Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 நவம்பர் 29 , பி.ப. 01:54 - 0 - 114
இலங்கையில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் எதிர்நோக்கியிருக்கும் நடைமுறைப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதாக பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை ஐயப்ப குரு சுவாமிகள் ஒன்றியத்தினருக்கும் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான கலந்துரையாடல் கொழும்பில் அமைந்துள்ள இந்துகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் (28) நடைபெற்றது.
இலங்கையில் 18 வருடங்களுக்கு மேலாக சபரிமலை ஐயப்ப படிபூஜைகளில் பங்கேற்ற குருசுவாமிமார்களுக்கு அரசாங்க அங்கீகாரம் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இதன்போது முன்வைக்கப்பட்டது.
இது குறித்து பிரதமரின் இணைப்புச்செயலாளர் செந்தில் தொண்டமான் கருத்து வெளியிடுகையில்,
''அரசாங்க தரப்பினருடன் நான் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தியிருக்கிறேன். வழமைபோல் செல்வதற்கு இந்த வருடம் கொவிட் பிரச்சினை தடையாக உள்ளதால் உள்நாட்டில் மாற்று ஏற்பாடுகள் சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக கொழும்பு, அளுத்மாவத்தை அருள்மிகு ஸ்ரீ ஆனந்த ஐயப்பன் தேவஸ்தானத்தில் செய்யப்படும்.
இது தொடர்பில் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உயரதிகாரிகள் சுகாதார நடைமுறைகள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் சுகாதார அமைச்சுடன் பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இனி வரும் காலங்களில் கொவிட் 19 பிரச்சினை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பிறகு இந்தியாவுக்கு யாத்திரைக்காக குறைந்த செலவில் விமான சீட்டுகளை வழங்குதல்,பயண ஏற்பாடுகள் குறித்து வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்'' என்றார்.
அத்துடன் பக்தர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு வழிபாடுகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை காணப்பட்டால், தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை சுகாதாரப் பிரிவு, பாதுகாப்புப் பிரிவு ஆகியவற்றுடன் கலந்துரையாடி செய்யவுள்ளோம்.
''மேலும் இலங்கை முழுவதும் ஐயப்பன் பக்தர்கள் செறிவாக இருக்கக் கூடிய இடங்களில் ஐயப்ப வழிபாடுகளை முன்னெடுப்பதை நோக்காகக் கொண்டு இந்துகலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட ஆலயங்களுக்கு ஐயப்பன் சுவாமி சிலைகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஐயப்ப பஜனைகளை நடாத்துவதற்குத் தேவையான இசைக்கருவிகள் கொள்வனவு உள்ளிட்ட இதர செலவுக்காக அடுத்த வருடம் முதல் ஒருதொகை நிதியை ஒதுக்கீடு செய்வது தொடர்பில் பணிப்பாளருடன் நான் பேச்சுவார்த்தை நடாத்தியிருக்கிறேன்'' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago