Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Mayu / 2024 ஜூன் 07 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தின் படி, ஒரு நபரின் உணவுக்கான உரிமை அடிப்படை மனித உரிமையாகும். மேலும், எந்த நாடும், எந்த ஒரு மக்கள்தொகைக் குழுவும் பட்டினிச் சாவு ஏற்படும் வகையில் செயல்படக் கூடாது, உணவு வழங்குவதைத் தடுப்பது போர் தந்திரமாக சர்வதேச சட்டத்தின்படி கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில்தான், உணவு பாதுகாப்பு தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 7ஆம் திகதியன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.
நாட்டில், போதுமான உணவு இருப்புகளைப் பராமரிப்பதில், நாட்டின் தற்போதைய இருப்பு நிலைமைக்கு கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது. கடந்த காலத்தில் எவ்வளவு உணவு உற்பத்தி செய்யப்பட்டது? எவ்வளவு இறக்குமதி செய்யப்படுகிறது?அத்தகைய தகவல்கள் அனைத்தும் அடிக்கடி மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்.
இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் பற்றிய தகவல்களும் பராமரிக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் எவ்வளவு உற்பத்தி நடக்கும்? அது போதுமானதா, இல்லை என்றால் இறக்குமதி செய்வது என்பது குறித்து தொடர்ந்து கண்காணிப்பு இருக்க வேண்டும். இல்லையெனில், இயற்கைப் பேரிடர் ஏற்படும் போது, அவசரகால கொள்முதல் அதிக விலைக்கு செய்யப்பட வேண்டும், இது ஒரு நாட்டிற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
போதுமான உணவு இருப்பு வைத்திருப்பதால் மட்டும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது. நாட்டின் அனைத்து மக்களும் பொருளாதார ரீதியாக உணவை வாங்கும் வகையில் உணவு விலை நிலைகள் பராமரிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு செய்ய முடியாதவர்களுக்கு சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் நிவாரணம் வழங்க வேண்டும். நாட்டின் ஒவ்வொரு பிரிவினரும் அவர்கள் விரும்பும் உணவைப் பெற முடியாவிட்டால், அத்தகைய நாட்டில் உணவுப் பாதுகாப்பு இல்லை.
உணவுப் பாதுகாப்பின் மற்றொரு முக்கிய அம்சம், குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் அவர்களின் வயது, பாலினம், நோய், கர்ப்பம், உடல் செயல்பாடு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, அவர்களின் ஊட்டச்சத்து தேவைகள் மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உணவைப் பெறுவதற்கான திறன் ஆகும்.
இல்லையெனில், குடும்பம் மற்றும் நாட்டின் பெரும்பான்மையானவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது. குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவின் மூலம் சரியான ஊட்டச்சத்து கிடைக்காவிட்டால், அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சி குறைந்து, குருட்டுத்தன்மை ஏற்பட்டு, அந்த தலைமுறை சமூகத்திற்கு பொருளாதார ரீதியாக பயன்படாத நபராக மாறக்கூடும்.
உணவுப் பாதுகாப்புக் கூறுகளில் ஏதேனும் இடையூறு அல்லது முறிவு ஏற்பட்டால் உணவுப் பாதுகாப்பின்மை எதிர்கொள்ளப்படுகிறது. கொவிட் -19 தொற்றுநோய்க்கு முன்பே, உலகில் ஏராளமான மக்கள் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஏற்கனவே உலக மக்கள் தொகையில் சுமார் 800 மில்லியன் மக்கள் தினசரி அடிப்படையில் போதுமான உணவு இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.
அவர்களின் உணவுப் பாதுகாப்பின்மைக்கு வறுமையே அடிப்படைக் காரணம். வறுமையில் வாடும் மக்களில் பெரும்பாலானோருக்கு சொந்தமாக இருப்பிடமோ, நிலமோ இல்லை. அவர்களால் தங்களுக்கான உணவை வாங்கவோ அல்லது உற்பத்தி செய்யவோ முடியவில்லை. பட்டினி கிடப்பது அவர்களின் அன்றாட வாடிக்கையாகிவிட்டது. சரியான உணவு இல்லாததால் ஊட்டச்சத்து குறைபாடு என்பது மரபுவழியாகிவிட்டது.
07.06.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
17 minute ago
21 minute ago
1 hours ago