Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 25 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் நபர்கள், ஆயுதங்களை மறைத்துவைத்திருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றபோது, மறைத்து வைத்திருந்த கைக்குண்டை எடுத்து பொலிஸார் மீது வீச முயன்றனர். அல்லது பொலிஸாரின் வசமிருந்த ஆயுதங்களை அபகரிக்க முயன்றனர். பொலிஸார் பதில் தாக்குதல் நடத்தியதில் இன்றேல் தற்பாதுகாப்புக்காக நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேக நபர்கள் உயிரிழந்தனர் என்பது ஒன்றும் புதுய கதையல்ல
.
சந்தேக நபர்கள் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தால், அந்த இடத்தின் அடையாளங்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றை ஏன்? பொலிஸார் மீட்டெடுக்க முடியாது. அது ஒருபுறமிருக்க, மற்றுமொரு பக்கத்தில், சந்தேக நபர்கள் கைவிலங்கு இடப்பட்டே, ஆயுதங்களைக் காண்பிப்பதற்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர். அவ்வாறு இருக்கையில், பொலிஸாரின் ஆயுதங்களை அவர்களால் எவ்வாறு அபகரிக்க முடியும்.
பாரிய குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்படும்போது, வழக்கை விசாரிக்க எடுக்கும் நேரம் காரணமாக, குற்றவாளி விடுவிக்கப்பட்டு சமூகத்திற்குத் திரும்பும் அபாயம் உள்ளது என்பதை பொலிஸார் அறிந்திருக்கிறது.
எனவே , அந்த சந்தேக நபரைச் சுட்டுக் கொல்வதன் மூலம், அதிக முயற்சி இல்லாமல் வேலையை முடிக்க முடியும்.
சந்தேக நபர்களை பொலிஸார் குற்றவாளிகளாக்க முடியாது. அதற்கே நீதிமன்றங்கள் இருக்கின்றன. எனினும், நாட்டில் நடக்கும் சம்பவங்களை பார்க்குமிடத்து, பாதுகாப்பற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் வலுக்கிறது.
எனினும், கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்குச் சென்றிருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும், பாதாள உலகக் கும்பல்களின் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் கூறியிருந்தார். உண்மையில் முற்றுப்புள்ளிவைக்கப்படவேண்டும்.
சந்தேகபரை நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போதும், சிறைச்சாலைகளுக்கு மீண்டும் கொண்டு செல்லும் போதும், அவர்களின் பாதுகாப்புக்கு பொலிஸாரே பொறுப்பு. எனினும், சந்தேகநபர்கள் பகிரங்கமாகவே சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.
நீதிமன்ற விதிகளின்படி, பிரதிவாதிகளைத் தெருவில் தூக்கிலிட முடியாது, மேலும் விசாரணைக்குப் பிறகுதான் பிரதிவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் பரிந்துரைக்க முடியும். சில நேரங்களில் அது சிறைத்தண்டனை. சில நேரங்களில் அது மரண தண்டனையாக இருக்கும்
நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தாலும், வெலிக்கடை சிறையில் உள்ள மரணதண்டனை நிறைவேற்றுபவர் (அலுகோசு) தண்டனையை நிறைவேற்றுவதில்லை. (தற்போது அலுகோசு இல்லை). ஏனெனில் அந்த தண்டனையை அமல்படுத்த ஜனாதிபதியின் பரிந்துரை தேவை. 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெ. ஆர். ஜெயவர்த்தனே குற்றவாளிகளின் மரணதண்டனையை அதிகாரப்பூர்வமற்ற முறையில் நிறுத்தினார், பின்னர் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
சர்வதேச சட்டத்தின்படி, ஒரு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன்பு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவரைக் கொல்வது நீதிக்குப் புறம்பான கொலை என்று அழைக்கப்படுகிறது. இதுபோன்ற கொலைகளைச் செய்யும் நாடுகளுக்குச் சர்வதேச அரங்கில் அங்கீகாரம் இல்லை என்பதை நினைவில் கொள்வது அவசியமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
6 hours ago
8 hours ago