2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

தொடுதிரை அலைபேசிகளால் சீரழியும் இளம் சமூகம்

R.Tharaniya   / 2025 மார்ச் 03 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

படுக்கையில் கிடந்து மல்லாக்க புரள முடியாத குழந்தைகளின் கைகளிலும் தொடுதிரை அலைபேசிகள் கொடுக்கப்பட்டு அவர்களை அழ விடாமல் வைத்திருக்கும் சூட்சுமத்தைத் தாய்மார்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்தளவுக்கு அலைபேசியின் தாக்கம் அதிகரித்துள்ளது. அலைபேசிகளால் பல நன்மைகள் கிடைத்தாலும். ஒரு சிலர் தேவையில்லாத வலைக்குள் சிக்கிக்கொள்கின்றன. 
 
ஒரு காலத்தில் அல்ல தற்போதும் அந்தரங்கம் மிக அந்தரங்கமாகவே பார்க்கப்படுகின்றது. எனினும், சமூக வலைத்தளங்களில் ஒருசிலரின் பதிவுகளை பார்த்தால், அந்தரங்கம் எல்லாமே நடுவீதிகளுக்கு இழுத்துவரப்பட்டுள்ளன.  எவற்றையெல்லாம் பார்க்கக்கூடாதோ, அவற்றையெல்லாம் பார்க்கவேண்டிய கண்டுறாவியாகிவிட்டது.
தங்களுடைய பிள்ளைகள் வெளில் சென்று கூடாத நண்பர்களுடன் சேர்ந்தால் கெட்டுவிடுவார்கள் என்ற நிலைமை அப்பால். வீட்டுக்குள் இருந்தாலே கெட்டுவிடுவார்கள் என்பதாகிவிட்டது. ஏனெனில், அந்தளவுக்கு அலைபேசிக்கு அடிமையாகிவிட்டார்கள். 
 
ஏற்கெனவே குறிப்பிட்டதை போல, மிக நல்ல விடயங்களுக்கு அலைபேசியைப் பயன்படுத்துவதே சிறந்தது. தீயவற்றை ஒதுக்கிவைத்துவிட்டால், எல்லாமே நன்மையாக இருக்கும். சமூக வலைத்தளங்கள் ஊடாக நண்பர்களாகி, கர்ப்பிணியான சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் செய்திகளாக இடம்பிடிக்கின்றன. இவற்றுக்கெல்லாம் பாடசாலையில் கற்பிக்க வேண்டிய பாடங்களையும், மேலதிக வேலைகளையும் நிகழ்நிலையின் (ஒன்லைன்) ஊடாக அனுப்புவதுதான். பெற்றோர்களால் தங்களுடைய பிள்ளைகளைக் கவனிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில், மேலதிக பாடங்களை அலைபேசி ஊடாக அனுப்பிவைத்துள்ளனர் எனக் கூடிய அலைபேசியுடன் மூடிய அறைகளுக்குள் சென்றுவிடும் பல பிள்ளைகள், காதல் வலையில் சிக்கி கற்பை இழந்து கர்ப்பிணியாகி விடுகின்றனர்.
 
அல்லது தங்களுடைய நிர்வாண படங்களை அனுப்புவதன் மூலம், மறுபுறத்தில் போலியான அன்பு வலையை வீசியவர்கள், அப்பெண்ணை அச்சுறுத்தி கற்பை சூறையாடிவிடுகின்றனர். தனியாக மட்டுமன்றி தங்களுடைய நண்பர்களையும் அழைத்துச்சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி விடுகின்றனர்.
மாணவர்கள் மற்றொரு மாணவரைத்   தொடர்ந்து தாக்கும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.  இந்த நாட்டில் மாணவர் சமூகம் தெருக்களிலும் பாடசாலைகளிலும் தாக்கிக்கொள்கின்றனர். உலகின் ஒவ்வொரு நாட்டிலும் சிறார் வன்முறை உள்ளது. அது நம் நாட்டிலும் இருக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. இளமையில் வன்முறையில் ஈடுபடும் ஒருவர், போதுமான வயதை அடையும் போது பாதாள உலகத்திலிருந்து வெளிப்படுவார். அல்லது அவன் தன் சொந்த குடும்பத்திலேயே ஒரு அரக்கனாக மாறிவிடுவான். இந்த அசுரன் இரவில் குடித்து விட்டுக் கெட்ட வார்த்தைகளைப் பேச ஆரம்பிக்கிறான்.  உடல் ரீதியாகவோ அல்லது பாலியல் ரீதியாகவோ அல்லது இரண்டு விதமாகவோ மீண்டும் மீண்டும் துஷ்பிரயோகம் செய்யப்படுதல், குடும்பத்திற்குள் அல்லது சொந்த சமூகத்திற்குள் தொடர்ந்து வன்முறைக்கு ஆளாகுதல்,   தொடர்ந்து கேலி செய்யப்படுதல்,  மரபணு ரீதியாக வன்முறைக்கு ஆளாகுதல்  தொலைக்காட்சி அல்லது சமூக ஊடகங்களில் காட்டப்படும் வன்முறைச் செயல்களைப் பார்ப்பதற்கு அடிமையாகுதல்,   போதைப்பொருள் அல்லது மதுவுக்கு அடிமையாகுதல் இளம் வயதிலேயே ஒருவரை வன்முறையாளராக மாற்றிவிடுகின்றது. ஆகையால், தொடுதிரை அலைபேசிகள் தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X