2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

தேங்காய் சம்பலுடன் சாப்பிடுவதும் கேள்விக்குறியாகிறது

Mayu   / 2024 ஒக்டோபர் 22 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய சந்தையை அவதானிக்கும் போது, பொருட்களின் விலைகள் திடீரென அதிகரிகத் தொடங்கி விட்டன. இதனால், சாதாரண மக்கள் மீண்டும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக நாட்டு அரிசி, வெள்ளை மற்றும் சிவப்பு அரிசியின் விலை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதால், சந்தையில் நாட்டு அரிசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏனைய அரிசி வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

கடந்த சில வருட அரிசி விலையை வைத்துப் பார்க்கும் போது, கீரி சம்பா அரிசி விலை மிக அதிகமாக இருந்தது. இதனால், பல விவசாயிகள், நாடு மற்றும் சம்பா நெல்லை கை விட்டு, கீரி சம்பாவை பயிரிட்டனர். இதுபோன்ற சூழ்நிலையில், கிராம அளவில் வேளாண் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவி அலுவலர்களின் மேற்பார்வை இருக்க வேண்டும்.

இத்தகைய வழிகாட்டுதல் இல்லாமல் கீரி சம்பா விவசாயம் செய்யப்பட்டதால், கீரி அரிசியின் விலை அசாதாரணமாகக் குறைந்ததோடு, நாடு மற்றும் சம்பா அரிசியின் விலையும் உயர்ந்தது. கிலோ கிராம் 380 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் கீரி சம்பா, 240 ரூபாவாகவும், 160-170 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் நாட்டு அரிசி, தற்போது 220 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. சில மில் உரிமையாளர்கள், மொத்த வியாபாரிகளுக்கு அரிசி கொண்டு வந்து இறக்கும் போது, கூடுதல் போக்குவரத்து கட்டணம் வசூலிக்கின்றனர். அப்போது மொத்த வியாபாரிகள் ஒரு கிலோ கிராம் நாட்டு அரிசியை 220 ரூபாய் அல்லது அதற்கு மேல் விற்கிறார்கள்.

இவ்வாறான நிலையில் சில்லறை விற்பனைக் கடையில் அரிசியைக் கட்டுப்பாட்டு விலைக்கு எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது எமக்குப் பிரச்சினையாக உள்ளது. இந்த நெருக்கடிக்குச் சிறந்த தீர்வாக தற்போது சில்லறை விற்பனைக் கடைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு விலையை அரிசி ஆலைகளுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும். அரிசி ஆலை உரிமையாளர்கள் அவர்கள் விரும்பும் விலைக்கு அரிசியை விற்க அனுமதித்து, சில்லறை விற்பனைக் கடைகளில் மட்டும் கட்டுப்பாட்டு விலையை அறிமுகப்படுத்துவதன் மூலம், சில்லறை விற்பனையாளர்கள் நாடு, சம்பா, போன்ற அரிசி வகைகளை விற்பனை செய்வதிலிருந்து விலகுவார்கள்.

அதேபோன்றதொரு நிலைதான் இப்போதும் ஏற்பட்டுள்ளது. அப்போது சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுவாகக் கிடைக்கும் கீரி சம்பா அரிசியை வாங்க நுகர்வோர் ஆசைப்படுவதால், கீரி அரிசியின் விலை மீண்டும் உயரும். அப்போது பல இலட்சம் மெட்ரிக் தொன் கீரி அரிசியைச் சேமித்து வைத்திருக்கும் மில் உரிமையாளர்களின் வருமானம் அதிகரிக்கும். இப்படித்தான் அரசாங்கத்தின் கைகளில் தலையை வைத்துள்ள பெரிய வியாபாரிகள் அரசாங்கத்தை வசை பாடுகின்றனர். அரசாங்கத்தைப் பாராட்டி அரசாங்கத்தின் நம்பிக்கையைப் பெற்று வாடிக்கையாளர்களைச் சுரண்டும் வஞ்சக மில் உரிமையாளர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

தேங்காய் விலையிலும் இதே நிலைதான். இன்று நகரச் சந்தையில் தேங்காய் ஒன்று 150-160 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதைக் காணமுடிகிறது. பொதுவாக செப்டெம்பர் முதல் டிசெம்பர் வரை தேங்காய் விளைச்சல் குறைவு. மேலும், சமீபத்தில் பெய்த மழையும் தேங்காய் விலை உயர்வுக்கு மற்றொரு காரணியாக உள்ளது. எனினும், அதிக இலாபம் ஈட்டுவதற்காகத் தேங்காய் விலையை உயர்த்துவது பொறுப்பற்ற செயலாகும். 

22.10.2024


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .