Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2021 ஜனவரி 03 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
காற்றுக் குமிழில் வந்து திரும்பிய இராஜதந்திரம்
தந்திரங்கள் பலவகைப்படும் அதிலும் இராஜதந்திரம் கற்றுத்தேர்ந்த, தொழில் தேர்ச்சிப் பெற்றவர்களால் மட்டுமே கையாளப்படும் ஒரு முறைமையாகும். நாடுகளுக்கிடையில் பேரப் பேச்சுகளுக்கும் நிறுவனங்களுக்குள் காய்நகர்த்தலுக்கும் இராஜதந்திரமே கையாளப்படும்.
“இராஜதந்திரம்” பகைமையின்றிக் கையாளும் ஓர் உத்தியாகும். அதனை “அரசனயம்” என்பர். இது இரு நாடுகளுக்கிடையே அமைதி, வணிகம், போர், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டுச் சூழல் மனித உரிமை தொடர்பிலான உறவை வலுப்படுத்துவதற்கு வழிசமைக்கு.
கொரோனா வைரஸ் நாட்டுக்குள் தலைவிரித்து தாண்டவமாடிக் கொண்டிருக்கும் நிலையில், கொவிட்-19 இன் பிறப்பிடமென குற்றஞ்சாட்டப்பட்ட சீனாவிலிருந்து உயர்மட்டத் தூதுக்குள் நாட்டுக்குள் வந்து திரும்பியிருகிறது.
அத்தூதுக்குழுவினர் தனிமைப்படுத்தல் சட்டத்துக்குள் உள்வாங்கப்படவில்லையென எதிரணியினரும் குற்றஞ்சாட்டியிருந்தனர். 14 நாள்கள் தனிமைப்படுத்தல் தேவையில்லையா? அப்படியாயின் நாடுதிரும்பும் சகலருக்கும் அதேமுறைமையை ஏன்? கையாள முடியாதென கேள்வியெழுப்பியிருந்தனர்.
சகல வகையான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், அறிக்கையொன்றை விடுத்திருந்த இலங்கைக்கான சீன தூதரகம், இராஜதந்திர அணுகுமுறையின் பிரகாரம் “காற்றுக் குமிழில்” முறைமையின் கீழே “பயண குமிழி” எனும் திட்டத்தின் ஊடாகவே உயர்மட்ட விஜயம் அமைந்திருந்ததென விளக்கமளித்திருந்தது.
இலங்கையின் மீதான சீனாவின் பேரன்பு தொடர்பில், பெரியண்ணனான இந்தியா, விழிப்பாகவே இருக்கிறது. தங்களை மீறி, முடிவுகளை எடுக்கமுடியாது என்பதை ஞாபகமூட்டும் வகையில், அமெரிக்காவும் மனித உரிமைகளை தூக்கிப்பிடித்து சமிக்ஞை காட்டும்.
சீனத்தூதுக்குழுவினரின் விஜயத்தையடுத்து, அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக் பாம்பியோ வருகைதரவுள்ளார். அவருடனேயே வரும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர், புதுடெல்லிக்கு பயணிக்கவிருக்கிறார் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே, இந்தியாவின் உயர்மட்ட தூதுக்குழுவொன்றும் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக, உத்தியோகபற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறாயின், இவற்றையெல்லாம் இராஜதந்திர அணுகுமுறையின் ஊடாகவே, கையாளவேண்டும்.
இலங்கையின் மீதான சீனாவின் ஆதிக்கம் தொடர்பிலான விமர்சனங்கள் ஒன்றும் புதிதல்ல. கொரோனா தொற்று வீரியத்துடன் இருக்கும் சூழ்நிலையில், மிகமுக்கியமான நாடுகளின் தூதுக்குழுக்களின் விஜயம் இராஜதந்திர அணுகுமுறையில் பிறழ்வு இருப்பதாகவே கருதவேண்டியுள்ளது.
தங்களுடைய ஆதிக்கத்தை தக்கவைத்துகொள்வதற்காக, பிராந்திய வல்லரசுகள் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளை தம்வசப்படுத்த முயலும் இராஜதந்திரத்தின் சில அணுகுமுறைகள் வெற்றிக்கண்டத்தில்லை என்பது வரலாறு. ஆகையால் வெளிநாட்டுக் கொள்கையை இறுகப்பிடிப்பதே நாட்டின் எதிர்காலத்துக்கு நன்மைபயக்கும். (15.10.2020)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago