Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
R.Tharaniya / 2025 ஏப்ரல் 20 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்கால சந்ததியினருக்காக இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருடைய கடமையாகும். எனினும், நாட்டில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, எதிர்கால சந்ததியினருக்கு என்ன மிஞ்சப் போகிறது என்பது கவலைக்குரிய விடயமாகவே இருக்கிறது.
நாட்டின் பல பாக்கங்களிலும் சட்டவிரோதமான காடழிப்பு, மணல் கொள்ளை, மண் அகற்றல், மாணிக்ககல் அகழ்தல், மரங்களைத் தரித்து பலகையாக்கி விற்பனை செய்தல். கால்வாய்களை அகழ்ந்து, மாணிக்ககல், மணல், மண் போன்றவற்றை அகழ்ந்தெடுத்து கொள்ளை விலைக்குச் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்தல் ஆகிய அதிகரித்துள்ளன.
காடழிப்பினால், காட்டு விலங்குகள் மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைந்து, பயிர்களை நாசம் செய்கின்றன. வீடுகளைத் துவம்சம் செய்துவிடுகின்றன. ஏன். உயிர்களையும் பறித்து விடுகின்றன. இவற்றுக்கெல்லாம், இயற்கையின் மீதான மனிதனின் அத்துமீறல்களே பிரதான காரணியாக இருக்கின்றன.
வடக்கு மாகாணத்தில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளில் தற்போது நடைபெற்று வரும் மணல் அகழ்வு மோசடி, முழுப் பகுதியையும் ஒரு நீர்த்தேக்கமாக மாற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த மணல் அகழ்வு அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியப்படுகிறது. இப்போது அரை மில்லியன் கனசதுர மணல் தோண்டி எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
கட்டிடம் கட்டுவதற்கு ஏற்ற மெல்லிய மணல், இந்தப் பகுதிகளில் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. கண்ணிவெடிகள் இருப்பதால், பொதுமக்களும் பாதுகாப்புப் படையினரும் இந்தப் பகுதிகளுக்குள் நுழையத் தயங்குகிறார்கள். இதற்குக் காரணம் மரண பயம். ஒரு பொலிஸ் அதிகாரி இறந்தால், ஒரு முழு குடும்பமும் அனாதையாகிவிடும்.
ஒரு குடிமகன் இறந்தால், ஒரு முழு குடும்பமும் அனாதையாகிவிடும். இந்த மணலை தோண்டி டிராக்டர்கள் மற்றும் டிப்பர்களில் ஏற்றும் சராசரி தொழிலாளியும் தனது உயிரைப் பணயம் வைக்கிறார்.
கண்ணிவெடிகளை அகற்றிவிட்டதாக அவர்கள் கூறினாலும், அவற்றை 100% அகற்றிவிட்டதாக அர்த்தமல்ல. அகற்றப்படாத ஒரு கண்ணிவெடியில் மண்வெடிப்பட்டால், அது உடனடியாக அகற்றப்படா விட்டாலும், அது வெடித்து ஏழு அல்லது எட்டு பேர் இறந்துவிடுவார்கள். இதேபோல், மணல் ஏற்றிச் செல்லும் டிப்பர் அல்லது டிராக்டர் ஒரு கண்ணிவெடியின் மீது மோதினால், உடனடியாக ஒரு வெடிப்பு ஏற்பட்டு, டிராக்டர் ஓட்டுநர் அல்லது டிப்பர் ஓட்டுநரின் உடல் பாகங்கள் மணலுடன் கலக்கப்படும்.
இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் தற்போது அடிக்கடி நடைபெற்று வருகின்றன. அரசாங்க அனுமதியின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபடுவது அத்தகைய ஒரு செயலாகும்.
மணல் கடத்தல்காரர்களை ஒடுக்க போதுமான பொலிஸ் ஆள் பலம் தங்களிடம் இல்லை ஆனால் இது போதாது. அரசாங்கமும் அதை ஒப்புக்கொண்டுள்ளது.
எனவே, குறைந்தபட்சம் கூடுதல் பொலிஸ் அதிகாரிகளை விரைவில் பொலிஸ் திணைக்களத்துக்கு வேண்டும். அத்துடன், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும், இயற்கை வளங்களுக்குத் தீங்கிழைப்போரை இனங்கண்டு, அவ்வாறானவர்களுக்குத் தகுந்த தண்டனையை வழங்க வழி சமைக்க வேண்டும்.
இல்லையேல், எதிர்கால சந்ததியினர், இயற்கையை வெறும் காட்சிகளிலும், காணொளிகளில் மட்டுமே காண முடியும். என்பது வருத்தமானது என்பதை நினைவுறுத்துகின்றோம்.
18.04.2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago
4 hours ago