2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

அமைதியாக பார்வையைத் திருடும் கண் அழுத்த நோய்

R.Tharaniya   / 2025 மார்ச் 11 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒவ்வொரு நபரும் தங்கள் கண்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பல்வேறு நோய்கள் உங்கள் பார்வையை மட்டும் பாதிக்காது, ஆனால், முழுமையான குருட்டுத்தன்மைக்கு கூட வழிவகுக்கும். கிளௌகோமா என்பது ஒரு நபரை நிரந்தரமாக குருடாக்கி, அமைதியாக அவர்களின் பார்வையை பறிக்கும் ஒரு நோயாகும்.
கண்ணுக்குள் இருக்கும் மென்மையான திசு திரவம் அக்வஸ் ஹ்யூமர் என்று அழைக்கப்படுகிறது.
 
இந்த திரவம் கண்ணின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது. இந்த திரவத்தின் வெளியேற்றம் தடுக்கப்பட்டால், கண்ணில் அழுத்தம் அதிகரிக்கிறது. கண் அழுத்தம் காரணமாக விழித்திரை சேதமடைவதால் ஏற்படும் பார்வைக் குறைபாடு ‘கிளௌகோமா’ என்று அழைக்கப்படுகிறது.
புதிதாக பிறந்த குழந்தைகளிலும் கூட ‘கிளௌகோமா’ ஒரு பிறவி நோயாகக் கருதப்படலாம். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தில் உள்ளனர்.நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஒற்றைத் தலைவலி போன்ற குடும்ப வரலாறு கொண்டவர்கள் ‘கிளௌகோமா’வினால் பாதிக்கப்படுகின்றனர்.
 
‘கிளௌகோமா’ அறிகுறிகள் மிக மெதுவாக உருவாகின்றன, அதனால்தான் பலருக்குப் பார்வை பிரச்சினைகள் ஏற்படும் வரை ‘கிளௌகோமா’வை உறுதியான முறையில் கண்டறிவது கடினம். படிப்படியாக ஏற்படும் 
பார்வை பிரச்சினைகள் மற்றும் மங்கலான பார்வை கண் சிவத்தல் கண் மற்றும் இமை பகுதியில் வலி 
வாந்தி குமட்டல் கண்ணில் கருப்பு மற்றும் வெள்ளை ஒளியின் பிரகாசங்கள் மற்றும் நிழல்கள் தோன்றுதல்.
‘கிளௌகோமா’வுக்கு முதல் சிகிச்சை மருந்து, இது கண்ணுக்கு வழங்கப்படும் திரவ மருந்து. இந்த மருந்து கண்ணில் உள்ள அழுத்தத்தை குறைத்து பார்வை நரம்புக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கிறது.
 
நோயாளிகள் மருத்துவரின் அறிவுறுத்தல்களை பின்பற்றுவது மிகவும் முக்கியம். மருத்துவர் நீண்ட நேரம் மருந்து எடுத்துக்கொள்ள அறிவுறுத்தினால், அதைப் புறக்கணிக்காதீர்கள். கண் அறுவை சிகிச்சை நிபுணர் மருந்துக்கான அளவை, நான்கு முதல் ஆறு மணி நேர இடைவெளியில் பரிந்துரைப்பார், மேலும் மருந்தைச் சரியான நேரத்தில் கண்ணுக்குள் செலுத்துவது அவசியம்.‘கிளௌகோமா’ தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது.
 
யாருக்கு என்ன? நோய் ஏற்படுகின்றது. யார், எவ்வாறு இறக்கின்றனர் என்பது தொடர்பில் பலருக்கும் தெரியாது. ஆகையால், உணவு, உடற்பயிற்சி மற்றும் வைத்தியர்களின் ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி நடந்து கொள்ள 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X