Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 30 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆணுக்குப் பிடித்தாற்போல ஒரு பெண் எப்படியெல்லாம் நடந்து கொள்ளவேண்டும், எதையெல்லாம் செய்யவேண்டும், செய்யக்கூடாது என்பதைத்தான் இத்தனை காலமும் சமூகம் பெண்களுக்குக் கற்பித்து வந்தது.
சுயதீர்மானங்கள் இயற்றவும், சுய தெரிவுகளைச் செய்யவும் முடிந்தவர்கள் என்பதைப் பெண்கள் நிரூபித்துப் பலகாலங்களாயிற்று. பெண்களால் ஆணை நேசிக்கவும் முடியும். வெறுக்கவும் முடியும்.
எல்லாப் பெண்களும் வெறுக்கக் கூடிய பொதுவான சில விடயங்களும் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் ஆண்களின் கொச்சையான வார்த்தைப் பயன்பாடு. ஆண்கள் கெட்ட வார்த்தையில் திட்டுவது, கொச்சையாகப் பேசுவதையே பொதுவாக எல்லாப் பெண்களுமே வெறுக்கிறார்கள். சில ஆண்கள் சாதாரணமாகப் பேசும்போதே கொச்சையான வார்த்தைப் பயன்பாட்டுக்குப் பழகியிருப்பார்கள். பொது இடங்களில், நாகரிகம் இன்றிப் பேசுவதும் ஒருவகை.
ஆண் என்ற கர்வத்துடன் இருப்பவர்களையும் பெண்களுக்குப் பிடிப்பதில்லை. அதோடு சில ஆண்கள் சோம்பேறிகள் போன்று எதிலும் ஆர்வம் இன்றி இருப்பார்கள்.
இத்தகைய ஆண்கள் மீதான பெண்களின் சுவாரசியம் விரைவிலேயே குறைந்துவிடும்.
திறமைக் குறைவு, தனிமையை மட்டுமே விரும்புவது, நண்பர்களுடன் அதிக நேரம் செலவழிப்பது, சைக்கோ குணத்துடன் செயற்படுவது, பயமுறுத்துவதுபோல பேசுவது, சுயநலவாதியாகச் செயற்படுவது, காதலற்று இருப்பது, எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுவது, வேலையில் மட்டும் கவனம் செலுத்தியபடி “ரொமான்ஸ்” இன்றி இருப்பது, கவனக்குறைவு, சோம்பேறித்தனம் இவை எல்லாம் ஆண் மீது பெண்ணுக்கு வெறுப்பை ஏற்படுத்துகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago