Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை
Princiya Dixci / 2022 மே 29 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
வைத்தியசாலை தங்குமிட அறையில் வைத்தியருடன் பெண்ணொருவர் தனிமையில் இருந்தமையை அறித்த பொதுமக்கள், வைத்தியசாலையை முற்றுகையிட்டமையால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (27) மாலை 3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, “குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றிய இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயதுடைய வைத்தியர், நேற்று (28) இடமாற்றலாகி செல்லவிருந்தார்.
இந்நிலையில், இவ்வைத்தியருக்கு சம்மாந்துறை பகுதியை சேர்ந்த 28 வயதுப் பெண்ணுக்கும் நெருங்கிய உறவு இருந்துள்ளது. அப்பெண்ணின் கணவர் தொழில் நிமிர்த்தம் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணியாற்றி வருவதுடன், அவர்களுக்கு 3 வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது.
திடிரென வைத்தியருக்கு இடமாற்ற உத்தரவு கிடைக்கப்பெற்ற நிலையில் தான் சேவை மேற்கொண்ட கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தனக்கென வழங்கப்பட்ட தங்குமிட அறைக்கு குறித்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார்.
இதன்போது வைத்தியரின் செயலை அறிந்து பொதுமக்களும் வைத்தியசாலை தரப்பின் சிலரும் இணைந்து தங்குமிட அறையில் இருந்த வைத்தியர் மற்றும் பெண்ணை உடனடியாக அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு அழைத்து செல்ல வேண்டுமென கோஷமிட்டமையால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் குறித்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரின் முறைப்பாட்டுக்கமைய, சம்பவ இடத்துக்கு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சென்று, வைத்தியர் மற்றும் யுவதியை பாதுகாப்பாக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் பெறப்பட்டு, அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புபட்ட வைத்தியருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
5 hours ago
8 hours ago
22 Dec 2024