Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை
Princiya Dixci / 2022 மார்ச் 29 , பி.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
வருமானம் குறைந்த குடும்பங்களின் வருமானத்தை அதிகரிக்கும் முகமாக, வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம். அன்சார் தெரிவித்தார்.
தேசிய வீட்டுத் தோட்ட வேலைத்திட்டத்தின் கீழ், “பசுமையானதொரு தேசம்” எனும் தொனிப்பொருளில், நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டத்துக்கமைய, அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரதான நிகழ்வு, அக்கரைப்பற்றில் இன்று (29) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம். ஹுஸைன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் ரீ.எம்.எம். அன்சார் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “நாடு ஒரு இக்கட்டான நிலையில் இருப்பதனால் அதிலிருந்து மீள்வதற்கு நாம் செயற்பட வேண்டும். அதற்கான ஆலோசனைகளையும், வழிவகைகளையும் அரசு முன்னெடுத்துள்ளது.
“தொடர்ந்தும் வறுமையில் வாழாமல், இவ்வாறான வீடுத்தோட்ட உற்பத்திகளை செய்வதனுடாக வறுமையிலிருந்து மீள்வதோடு, நாட்டின் பொருளாதாரத்துக்கும் பெரும் பங்களிப்பை வழங்க முடியும்.
“இரசாயன பாவனையிால் இன்று நாட்டில் அதிகமானோர் தொற்றா நோய்க்கு ஆளாகி வருவதைக் காண முடிகின்றது. நாம் அதிலிருந்து மீள்வதற்கு நஞ்சற்ற உணவு உற்பத்தியை வீட்டுத் தோட்டங்களில் பயிரிட வேண்டும்.
“இதற்கென தெரிவு செய்யப்பட்டுள்ள பயணாளிகளுக்கு வழங்கப்படுகின்ற பயிர்க்கன்றுகளை வீண்விரயம் செய்யாமல் அதனுடாக தங்களது வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அரசாங்கத்தின் இவ்வாறான இலக்கினை அடைய முடியும்” என்றார்.
இதனடிப்படையில், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 28 கிராம சேவகர் பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு மிளகாய், கறி மிளகாய், கத்தரி மற்றும் தக்காளி என நான்கு வகை பயிர்க்கன்றுகள் வழங்கப்பட்டதுடன், விதைப்பொதிகளும் வழங்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
37 minute ago
39 minute ago
48 minute ago