2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

வியாபாரம் நடத்த வாகனங்களை அகற்ற கோரிக்கை

Princiya Dixci   / 2022 ஜூலை 19 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று பிரதேசத்தில் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக வீதி ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களால் வர்த்தக நிலையங்களைத் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக கடந்த 03 வாரங்களுக்கு மேலாக வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் மோட்டார் சைக்கிள்கள், ஓட்டோக்கள், கார் மற்றும் லொறி என்பன நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, பொதுமக்கள்களும் பல்வேறு அசௌகரீகங்களை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரதான வீதி மற்றும் சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்குச் செல்லும் வீதி மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களால் வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஆகியோர் வைத்தியசாலைக்கு செல்ல முடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே, இது தொடர்பாக அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் பொலிஸார் ஆகியோர் நடவடிக்கை எடுத்து, குறித்த வாகனங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வர்த்தக நிலைய உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X