2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் சிக்கி முன்னாள் எம்.பி, பியசேன காயம்

Freelancer   / 2023 மார்ச் 17 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன, விபத்தொன்றில் சிக்கி காயமடைந்த நிலையில் இன்று (17) காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று - பொத்துவில் பிரதான வீதியின் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பொது மயானத்துக்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த அவர், பொத்துவில் பிரதேசத்தில் இருந்து பொலன்னறுவை நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸினால்  மோதுண்ட நிலையில் இவ்விபத்து இடம்பெறுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் படுகாயமடைந்த முன்னாள் எம்.பி பியசேன, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.  (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X